Tamil proverbs - தமிழ் பழமொழிகள்

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...


பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுதானும் பேசாதே.
பகுத்தறியாமல் துணியாதே, படபடப்பாகச் செய்யாதே.
பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
பக்கச் சொல் பதினாயிரம்.
பசியுள்ளவன் ருசி அறியான்.
பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.
பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
படையிருந்தால் அரணில்லை.
படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
பணம் பத்தும் செய்யும்.
பணம் உண்டானால் மணம் உண்டு.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்.
பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
பதறாத காரியம் சிதறாது.
பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
பருவத்தே பயிர் செய்.
பல துளி பெருவெள்ளம்.
பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
பல்லக்கு ஏய யோகம் உண்டு, உன்னி ஏறச் சீவன் இல்லை.
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்.
பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்.
பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.

Credit: tamilproverbs




Write Your Comments or Suggestion...