Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
மு
முகத்துக்கு முகம் கண்ணாடி |
முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா? |
முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும். |
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா? |
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா |
முதல் கோணல் முற்றுங் கோணல் |
முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார். |
முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை. |
முருங்கை பருத்தால் தூணாகுமா? |
முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும். |
முள்ளை முள்ளால் எடு. |
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். |
முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது? |
முன் ஏர் போன வழிப் பின் ஏர். |
முன்கை நீண்டால் முழங்கை நீளும். |
முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா? |
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? |
Credit: tamilproverbs