திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [1] அறத்துப்பால் (Virtue)
குறள் இயல்: [1] பாயிரவியல் (Prologue)
அதிகாரம்: [2] வான்சிறப்பு (The Blessing of Rain)
குறள் : 11வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.


விளக்கம்:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்
Kural: 11Translation:
The genial rain ambrosia call: The world but lasts while rain shall fall

Explanation:
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia
குறள் : 12துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.


விளக்கம்:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்
Kural: 12Translation:
The rain begets the food we eat

Explanation:
Rain produces good food, and is itself food
குறள் : 13விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.


விளக்கம்:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்
Kural: 13Translation:
Let clouds their visits stay, and dearth Distresses all the sea-girt earth

Explanation:
If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world
குறள் : 14ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.


விளக்கம்:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்
Kural: 14Translation:
Unless the fruitful shower descend, The ploughman's sacred toil must end

Explanation:
If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease
குறள் : 15கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.


விளக்கம்:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்
Kural: 15Translation:
Destruction it may sometimes pour But only rain can life restore

Explanation:
Rain by its absence ruins men; and by its existence restores them to fortune
குறள் : 16விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.


விளக்கம்:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
Kural: 16Translation:
No grassy blade its head will rear, If from the cloud no drop appear

Explanation:
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen
குறள் : 17நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.


விளக்கம்:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்
Kural: 17Translation:
The ocean's wealth will waste away, Except the cloud its stores repay

Explanation:
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain)
குறள் : 18சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.


விளக்கம்:
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது
Kural: 18Translation:
The earth, beneath a barren sky, Would offerings for the gods deny

Explanation:
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials
குறள் : 19தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.


விளக்கம்:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
Kural: 19Translation:
Were heaven above to fail below Nor alms nor penance earth would show

Explanation:
If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world
குறள் : 20நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.


விளக்கம்:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்
Kural: 20Translation:
Water is life that comes from rain Sans rain our duties go in vain

Explanation:
If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...