திருக்குறள் , Tamil Tirukural
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
குறள் பால்: [2] | பொருட்பால் (Wealth) |
குறள் இயல்: [6] | அமைச்சியல் (Minister of State) |
அதிகாரம்: [70] | மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Conduct in the Presence of the King) |
குறள் : 691 | அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். விளக்கம்: அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும். |
Kural: 691 | Translation: Move with hostile kings as with fire Not coming close nor going far Explanation: Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof |
குறள் : 692 | மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும். விளக்கம்: அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும். |
Kural: 692 | Translation: Crave not for things which kings desire This brings thee their fruitful favour Explanation: For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth |
குறள் : 693 | போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. விளக்கம்: .( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது. |
Kural: 693 | Translation: Guard thyself from petty excess Suspected least, there's no redress Explanation: Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it |
குறள் : 694 | செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து. விளக்கம்: வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும். |
Kural: 694 | Translation: Whisper not; nor smile exchange Amidst august men's assemblage Explanation: While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others |
குறள் : 695 | எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. விளக்கம்: (அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும். |
Kural: 695 | Translation: Hear not, ask not the king's secret Hear only when he lets it out Explanation: (When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by |
குறள் : 696 | குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல். விளக்கம்: அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும். |
Kural: 696 | Translation: Discern his mood and time and tell No dislikes but what king likes well Explanation: Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable |
குறள் : 697 | வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். விளக்கம்: அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும். |
Kural: 697 | Translation: Tell pleasing things; and never tell Even if pressed what is futile Explanation: Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so) |
குறள் : 698 | இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். விளக்கம்: (அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும். |
Kural: 698 | Translation: As young and kinsman do not slight; Look with awe king's light and might Explanation: Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!" |
குறள் : 699 | கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். விளக்கம்: அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார். |
Kural: 699 | Translation: The clear-visioned do nothing base Deeming they have the monarch's grace Explanation: Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within |
குறள் : 700 | பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். விளக்கம்: யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும். |
Kural: 700 | Translation: Worthless acts based on friendship old Shall spell ruin and woe untold Explanation: The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin |
Credit: Thirukural