திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [11] குடியியல் (Miscellaneous)
அதிகாரம்: [104] உழவு (Farming)
குறள் : 1031சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.


விளக்கம்:
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
Kural: 1031Translation:
Farming though hard is foremost trade Men ply at will but ploughmen lead

Explanation:
Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer
குறள் : 1032உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.


விளக்கம்:
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.
Kural: 1032Translation:
Tillers are linch-pin of mankind Bearing the rest who cannot tend

Explanation:
Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil
குறள் : 1033உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.


விளக்கம்:
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
Kural: 1033Translation:
They live who live to plough and eat The rest behind them bow and eat

Explanation:
They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life
குறள் : 1034பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.


விளக்கம்:
நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.
Kural: 1034Translation:
Who have the shade of cornful crest Under their umbra umbrellas rest

Explanation:
Patriotic farmers desire to bring all other states under the control of their own king
குறள் : 1035இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.


விளக்கம்:
கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.
Kural: 1035Translation:
Who till and eat, beg not; nought hide But give to those who are in need

Explanation:
Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg
குறள் : 1036உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.


விளக்கம்:
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.
Kural: 1036Translation:
Should ploughmen sit folding their hands Desire-free monks too suffer wants

Explanation:
If the farmer's hands are slackened, even the ascetic state will fail
குறள் : 1037தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.


விளக்கம்:
ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.
Kural: 1037Translation:
Moulds dried to quarter-dust ensure Rich crops without handful manure

Explanation:
If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure
குறள் : 1038ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.


விளக்கம்:
ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.
Kural: 1038Translation:
Better manure than plough; then weed; Than irrigating, better guard

Explanation:
Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it)
குறள் : 1039செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.


விளக்கம்:
நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.
Kural: 1039Translation:
If landsmen sit sans moving about The field like wife will sulk and pout

Explanation:
If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure
குறள் : 1040இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.


விளக்கம்:
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.
Kural: 1040Translation:
Fair good earth will laugh to see Idlers pleading poverty

Explanation:
The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...