திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [5] அரசியல் (Royalty)
அதிகாரம்: [57] வெருவந்த செய்யாமை (Absence of Terrorism)
குறள் : 561தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.


விளக்கம்:
செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.
Kural: 561Translation:
A king enquires and gives sentence Just to prevent future offence

Explanation:
He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed
குறள் : 562கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.


விளக்கம்:
ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.
Kural: 562Translation:
Wield fast the rod but gently lay This strict mildness prolongs the sway

Explanation:
Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness
குறள் : 563வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.


விளக்கம்:
குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.
Kural: 563Translation:
His cruel rod of dreadful deed Brings king's ruin quick indeed

Explanation:
The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin
குறள் : 564இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.


விளக்கம்:
நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.
Kural: 564Translation:
As men the king a tyrant call His days dwindled, hasten his fall

Explanation:
The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened
குறள் : 565அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.


விளக்கம்:
எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.
Kural: 565Translation:
Whose sight is scarce, whose face is foul His wealth seems watched by a ghoul

Explanation:
The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil
குறள் : 566கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.


விளக்கம்:
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.
Kural: 566Translation:
Whose word is harsh, whose sight is rude His wealth and power quickly fade

Explanation:
The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him
குறள் : 567கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.


விளக்கம்:
கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.
Kural: 567Translation:
Reproofs rough and punishments rude Like files conquering power corrode

Explanation:
Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies)
குறள் : 568இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.


விளக்கம்:
அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.
Kural: 568Translation:
The king who would not take counsels Rages with wrath-his fortune fails

Explanation:
The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them
குறள் : 569செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.


விளக்கம்:
முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.
Kural: 569Translation:
The king who builds not fort betimes Fears his foes in wars and dies

Explanation:
The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish
குறள் : 570கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.


விளக்கம்:
கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.
Kural: 570Translation:
The crushing burden borne by earth Is tyrants bound to fools uncouth

Explanation:
The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds)

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...