திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [5] அரசியல் (Royalty)
அதிகாரம்: [40] கல்வி (Learning)
குறள் : 391கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.


விளக்கம்:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
Kural: 391Translation:
Lore worth learning, learn flawlessly Live by that learning thoroughly

Explanation:
Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning
குறள் : 392எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.


விளக்கம்:
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
Kural: 392Translation:
Letter, number, art and science Of living kind both are the eyes

Explanation:
Letters and numbers are the two eyes of man
குறள் : 393கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.


விளக்கம்:
கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
Kural: 393Translation:
The learned alone have eyes on face The ignorant two sores of disgrace

Explanation:
The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face
குறள் : 394உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.


விளக்கம்:
மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
Kural: 394Translation:
To meet with joy and part with thought Of learned men this is the art

Explanation:
It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again.)
குறள் : 395உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.


விளக்கம்:
செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.
Kural: 395Translation:
Like poor before rich they yearn: For knowledge: the low never learn

Explanation:
The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy
குறள் : 396தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.


விளக்கம்:
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
Kural: 396Translation:
As deep you dig the sand spring flows As deep you learn the knowledge grows

Explanation:
Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning
குறள் : 397யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.


விளக்கம்:
கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.
Kural: 397Translation:
All lands and towns are learner's own Why not till death learning go on!

Explanation:
How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?
குறள் : 398ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.


விளக்கம்:
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
Kural: 398Translation:
The joy of learning in one birth Exalts man upto his seventh

Explanation:
The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births
குறள் : 399தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.


விளக்கம்:
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.
Kural: 399Translation:
The learned foster learning more On seeing the world enjoy their lore

Explanation:
The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it
குறள் : 400கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.


விளக்கம்:
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
Kural: 400Translation:
Learning is wealth none could destroy Nothing else gives genuine joy

Explanation:
Learning is the true imperishable riches; all other things are not riches

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...