திருக்குறள் , Tamil Tirukural
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
குறள் பால்: [2] | பொருட்பால் (Wealth) |
குறள் இயல்: [10] | நட்பியல் (Friendship) |
அதிகாரம்: [84] | பேதைமை (Folly) |
குறள் : 831 | பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். விளக்கம்: பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும். |
Kural: 831 | Translation: This is folly's prominent vein To favour loss and forego gain Explanation: Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain |
குறள் : 832 | பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல். விளக்கம்: ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும். |
Kural: 832 | Translation: Folly of follies is to lead A lewd and lawless life so bad Explanation: The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden |
குறள் : 833 | நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில் விளக்கம்: தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள். |
Kural: 833 | Translation: Shameless, aimless, callous, listless Such are the marks of foolishness Explanation: Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool |
குறள் : 834 | ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல். விளக்கம்: நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை. |
Kural: 834 | Translation: No fool equals the fool who learns Knows, teaches, but self-control spurns Explanation: There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching |
குறள் : 835 | ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. விளக்கம்: எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான். |
Kural: 835 | Translation: The fool suffers seven fold hells In single birth of hellish ills Explanation: A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births |
குறள் : 836 | பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். விளக்கம்: ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான். |
Kural: 836 | Translation: A know-nothing fool daring a deed Not only fails but feels fettered Explanation: If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail (But) is it all ? He will even adorn himself with fetters |
குறள் : 837 | ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை. விளக்கம்: பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர். |
Kural: 837 | Translation: Strangers feast and kinsmen fast When fools mishandle fortunes vast Explanation: If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve |
குறள் : 838 | மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின். விளக்கம்: பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும். |
Kural: 838 | Translation: Fools possessing something on hand Like dazed and drunken stupids stand Explanation: A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy |
குறள் : 839 | பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில். விளக்கம்: பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும். |
Kural: 839 | Translation: Friendship with fools is highly sweet For without a groan we part Explanation: The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be |
குறள் : 840 | கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். விளக்கம்: சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது. |
Kural: 840 | Translation: Entrance of fools where Savants meet Looks like couch trod by unclean feet Explanation: The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed |
Credit: Thirukural