திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [10] நட்பியல் (Friendship)
அதிகாரம்: [90] பெரியாரைப் பிழையாமை (Not Offending the Great)
குறள் : 891ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.


விளக்கம்:
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.
Kural: 891Translation:
Not to spite the mighty ones Safest safeguard to living brings

Explanation:
Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil)
குறள் : 892பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.


விளக்கம்:
ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.
Kural: 892Translation:
To walk unmindful of the great Shall great troubles ceaseless create

Explanation:
To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils
குறள் : 893கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.


விளக்கம்:
அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.
Kural: 893Translation:
Heed not and do, if ruin you want Offence against the mighty great

Explanation:
If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns)
குறள் : 894கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.


விளக்கம்:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
Kural: 894Translation:
The weak who insult men of might Death with their own hands invite

Explanation:
The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them)
குறள் : 895யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.


விளக்கம்:
மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.
Kural: 895Translation:
Where can they go and thrive where Pursued by powerful monarch's ire?

Explanation:
Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go
குறள் : 896எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.


விளக்கம்:
தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.
Kural: 896Translation:
One can escape in fire caught The great who offends escapes not

Explanation:
Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees)
குறள் : 897வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.


விளக்கம்:
தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.
Kural: 897Translation:
If holy mighty sages frown Stately gifts and stores who can own?

Explanation:
If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?
குறள் : 898குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.


விளக்கம்:
மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.
Kural: 898Translation:
When hill-like sages are held small The firm on earth lose home and all

Explanation:
If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth
குறள் : 899ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.


விளக்கம்:
உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.
Kural: 899Translation:
Before the holy sage's rage Ev'n Indra's empire meets damage

Explanation:
Kings even fall from high estate and perish in the flame
குறள் : 900இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.


விளக்கம்:
மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.
Kural: 900Translation:
Even mighty aided men shall quail If the enraged holy seers will

Explanation:
Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...