திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [3] காமத்துப்பால் (Love)
குறள் இயல்: [13] கற்பியல் (The Post-marital love)
அதிகாரம்: [118] கண் விதுப்பழிதல் (Eyes consumed with Grief)
குறள் : 1171கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.


விளக்கம்:
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
Kural: 1171Translation:
The eye pointed him to me; why then They weep with malady and pine?

Explanation:
As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him)
குறள் : 1172தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்?


விளக்கம்:
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
Kural: 1172Translation:
Why should these dyed eyes grieve now sans Regrets for their thoughtless glance?

Explanation:
The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault)
குறள் : 1173கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.


விளக்கம்:
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.
Kural: 1173Translation:
Eyes darted eager glance that day It's funny that they weep today

Explanation:
They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?
குறள் : 1174பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.


விளக்கம்:
என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.
Kural: 1174Translation:
These eyes left me to endless grief Crying adry without relief

Explanation:
These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up
குறள் : 1175படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.


விளக்கம்:
அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.
Kural: 1175Translation:
My eyes causing lust more than sea Suffer that torture sleeplessly

Explanation:
Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness
குறள் : 1176ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.


விளக்கம்:
எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!
Kural: 1176Translation:
Lo! eyes that wrought this love-sickness Are victims of the same themselves

Explanation:
The eyes that have given me this disease have themselves been seized with this (suffering) Oh! I am much delighted
குறள் : 1177உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.


விளக்கம்:
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.
Kural: 1177Translation:
Let tears dry up pining pining In eyes that eyed him longing longing

Explanation:
The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears
குறள் : 1178பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.


விளக்கம்:
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.
Kural: 1178Translation:
Ther's he whose lips loved, not his heart Yet my eyes pine seeing him not

Explanation:
He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him
குறள் : 1179வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.


விளக்கம்:
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.
Kural: 1179Translation:
He comes; no sleep; he goes; no sleep This is the fate of eyes that weep

Explanation:
When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony
குறள் : 1180மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.


விளக்கம்:
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.
Kural: 1180Translation:
Like drum beats eyes declare my heart; From people who could hide his secret?

Explanation:
It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...