திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [10] நட்பியல் (Friendship)
அதிகாரம்: [81] பழைமை (Familiarity)
குறள் : 801பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.


விளக்கம்:
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.
Kural: 801Translation:
That friendship is good amity Which restrains not one's liberty

Explanation:
Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy)
குறள் : 802நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.


விளக்கம்:
நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.
Kural: 802Translation:
Friendship's heart is freedom close; Wise men's duty is such to please

Explanation:
The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise
குறள் : 803பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.


விளக்கம்:
பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.
Kural: 803Translation:
Of long friendship what is the use Righteous freedom if men refuse?

Explanation:
Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?
குறள் : 804விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.


விளக்கம்:
உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.
Kural: 804Translation:
Things done unasked by loving friends Please the wise as familiar trends!

Explanation:
If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability
குறள் : 805பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.


விளக்கம்:
வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.
Kural: 805Translation:
Offence of friends feel it easy As folloy or close intimacy

Explanation:
If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy
குறள் : 806எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.


விளக்கம்:
உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.
Kural: 806Translation:
They forsake not but continue In friendship's bounds though loss ensue

Explanation:
Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends
குறள் : 807அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.


விளக்கம்:
அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.
Kural: 807Translation:
Comrades established in firm love Though ruin comes waive not their vow

Explanation:
Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin
குறள் : 808கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.


விளக்கம்:
பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.
Kural: 808Translation:
Fast friends who list not tales of ill Though wronged they say \"that day is well\"

Explanation:
To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault
குறள் : 809கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.


விளக்கம்:
உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.
Kural: 809Translation:
To love such friends the world desires Whose friendship has unbroken ties

Explanation:
They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy
குறள் : 810விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.


விளக்கம்:
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்
Kural: 810Translation:
Even foes love for better ends Those who leave not long-standing friends

Explanation:
Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriends

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...