திருக்குறள் , Tamil Tirukural
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
குறள் பால்: [1] | அறத்துப்பால் (Virtue) |
குறள் இயல்: [2] | இல்லறவியல் (Domestic Virtue) |
அதிகாரம்: [8] | அன்புடைமை (The Possession of Love) |
குறள் : 71 | அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். விளக்கம்: அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும் |
Kural: 71 | Translation: What bolt can bar true love in fact The tricking tears reveal the heart Explanation: Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within |
குறள் : 72 | அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. விளக்கம்: அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் |
Kural: 72 | Translation: To selves belong the loveless ones; To oth'rs the loving e'en to bones Explanation: Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others |
குறள் : 73 | அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. விளக்கம்: அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர். |
Kural: 73 | Translation: Soul is encased in frame of bone To taste the life of love alone Explanation: They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth) |
குறள் : 74 | அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு. விளக்கம்: அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும் |
Kural: 74 | Translation: Love yields aspiration and thence Friendship springs up in excellence Explanation: Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship |
குறள் : 75 | அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. விளக்கம்: உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர் |
Kural: 75 | Translation: The crowning joy of home life flows From peaceful psychic love always Explanation: These are the fruits of tranquil life of love |
குறள் : 76 | அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. விளக்கம்: அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது |
Kural: 76 | Translation: \"Love is virtue's friend\" say know-nots It helps us against evil plots Explanation: The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice |
குறள் : 77 | என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். விளக்கம்: எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். |
Kural: 77 | Translation: Justice burns the loveless form Like solar blaze the boneless worm Explanation: Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, ie worms |
குறள் : 78 | அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. விளக்கம்: அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது. |
Kural: 78 | Translation: Life bereft of love is gloom Can sapless tree in desert bloom? Explanation: The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert |
குறள் : 79 | புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. விளக்கம்: உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும். |
Kural: 79 | Translation: Love is the heart which limbs must move, Or vain the outer parts will prove Explanation: Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member |
குறள் : 80 | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. விளக்கம்: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும் |
Kural: 80 | Translation: The seat of life is love alone; Or beings are but skin and bone! Explanation: That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin |
Credit: Thirukural