திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [1] அறத்துப்பால் (Virtue)
குறள் இயல்: [2] இல்லறவியல் (Domestic Virtue)
அதிகாரம்: [5] இல்வாழ்க்கை (Domestic Life)
குறள் : 41இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.


விளக்கம்:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
Kural: 41Translation:
The ideal householder is he Who aids the natural orders there

Explanation:
He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in
குறள் : 42துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.


விளக்கம்:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.
Kural: 42Translation:
His help the monk and retired share, And celibate students are his care

Explanation:
He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead
குறள் : 43தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.


விளக்கம்:
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
Kural: 43Translation:
By dutiful householder's aid God, manes, kin, self and guests are served

Explanation:
The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself
குறள் : 44பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.


விளக்கம்:
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
Kural: 44Translation:
Sin he shuns and food he shares His home is bright and brighter fares

Explanation:
His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others)
குறள் : 45அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.


விளக்கம்:
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
Kural: 45Translation:
In grace and gain the home excels, Where love with virtue sweetly dwells

Explanation:
If the married life possess love and virtue, these will be both its duty and reward
குறள் : 46அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்?


விளக்கம்:
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?
Kural: 46Translation:
Who turns from righteous family To be a monk, what profits he?

Explanation:
What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?
குறள் : 47இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.


விளக்கம்:
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.
Kural: 47Translation:
Of all who strive for bliss, the great Is he who leads the married state

Explanation:
Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state
குறள் : 48ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.


விளக்கம்:
மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
Kural: 48Translation:
Straight in virtue, right in living Make men brighter than monks praying

Explanation:
The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance
குறள் : 49அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.


விளக்கம்:
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
Kural: 49Translation:
Home-life and virtue, are the same; Which spotless monkhood too can claim

Explanation:
The marriage state is truly called virtue The other state is also good, if others do not reproach it
குறள் : 50வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.


விளக்கம்:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
Kural: 50Translation:
He is a man of divine worth Who lives in ideal home on earth

Explanation:
He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...