திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [10] நட்பியல் (Friendship)
அதிகாரம்: [89] உட்பகை (Enmity within)
குறள் : 881நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.


விளக்கம்:
இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.
Kural: 881Translation:
Traitorous kinsmen will make you sad As water and shade do harm when bad

Explanation:
Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain
குறள் : 882வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.


விளக்கம்:
வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
Kural: 882Translation:
You need not sword-like kinsmen fear Fear foes who feign as kinsmen dear

Explanation:
Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly
குறள் : 883உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.


விளக்கம்:
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.
Kural: 883Translation:
The secret foe in days evil Will cut you, beware, like potters' steel

Explanation:
Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay
குறள் : 884மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.


விளக்கம்:
மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.
Kural: 884Translation:
The evil-minded foe within Foments trouble, spoils kinsmen!

Explanation:
The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations
குறள் : 885உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.


விளக்கம்:
உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.
Kural: 885Translation:
A traitor among kinsmen will Bring life-endangering evil

Explanation:
If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime
குறள் : 886ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.


விளக்கம்:
ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.
Kural: 886Translation:
Discord in kings' circle entails Life-destroying deadly evils

Explanation:
If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death
குறள் : 887செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.


விளக்கம்:
செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.
Kural: 887Translation:
A house hiding hostiles in core Just seems on like the lid in jar

Explanation:
Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid
குறள் : 888அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.


விளக்கம்:
உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.
Kural: 888Translation:
By secret spite the house wears out Like gold crumbling by file's contact

Explanation:
A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away
குறள் : 889எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.


விளக்கம்:
எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.
Kural: 889Translation:
Ruin lurks in enmity As slit in sesame though it be

Explanation:
Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it
குறள் : 890உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.


விளக்கம்:
அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.
Kural: 890Translation:
Dwell with traitors that hate in heart Is dwelling with snake in selfsame hut

Explanation:
Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...