திருக்குறள் , Tamil Tirukural
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
குறள் பால்: [2] | பொருட்பால் (Wealth) |
குறள் இயல்: [10] | நட்பியல் (Friendship) |
அதிகாரம்: [83] | கூடா நட்பு (Unreal Friendship) |
குறள் : 821 | சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. விளக்கம்: அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும். |
Kural: 821 | Translation: The friendship by an enemy shown Is anvil in time, to strike you down Explanation: The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself |
குறள் : 822 | இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். விளக்கம்: இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும். |
Kural: 822 | Translation: Who pretend kinship but are not Their friendship's fickle like woman's heart Explanation: The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women |
குறள் : 823 | பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது. விளக்கம்: பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை. |
Kural: 823 | Translation: They may be vast in good studies But heartfelt-love is hard for foes Explanation: Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart |
குறள் : 824 | முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும். விளக்கம்: முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும். |
Kural: 824 | Translation: Fear foes whose face has winning smiles Whose heart is full of cunning guiles Explanation: One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart |
குறள் : 825 | மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. விளக்கம்: மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது. |
Kural: 825 | Translation: Do not trust in what they tell Whose mind with your mind goes ill Explanation: In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart |
குறள் : 826 | நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். விளக்கம்: நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும். |
Kural: 826 | Translation: The words of foes is quickly seen Though they speak like friends in fine Explanation: Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import) |
குறள் : 827 | சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். விளக்கம்: வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது. |
Kural: 827 | Translation: Trust not the humble words of foes Danger darts from bending bows Explanation: Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes |
குறள் : 828 | தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து. விளக்கம்: பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே. |
Kural: 828 | Translation: Adoring hands of foes hide arms Their sobbing tears have lurking harms Explanation: A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature |
குறள் : 829 | மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று. விளக்கம்: புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும். |
Kural: 829 | Translation: In open who praise, at heart despise Cajole and crush them in friendly guise Explanation: It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart) |
குறள் : 830 | பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல். விளக்கம்: பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும். |
Kural: 830 | Translation: When foes, in time, play friendship's part Feign love on face but not in heart Explanation: When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former) |
Credit: Thirukural