திருக்குறள் , Tamil Tirukural
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
குறள் பால்: [2] | பொருட்பால் (Wealth) |
குறள் இயல்: [10] | நட்பியல் (Friendship) |
அதிகாரம்: [80] | நட்பாராய்தல் (Investigation in forming Friendships) |
குறள் : 791 | நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. விளக்கம்: நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை. |
Kural: 791 | Translation: Than testless friendship nought is worse For contacts formed will scarcely cease Explanation: As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry |
குறள் : 792 | ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும். விளக்கம்: ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும். |
Kural: 792 | Translation: Friendship made without frequent test Shall end in grief and death at last Explanation: The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death |
குறள் : 793 | குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. விளக்கம்: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும். |
Kural: 793 | Translation: Temper, descent, defects and kins Trace well and take companions Explanation: Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations |
குறள் : 794 | குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. விளக்கம்: உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும். |
Kural: 794 | Translation: Take as good friend at any price The nobly born who shun disgrace Explanation: The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing |
குறள் : 795 | அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நடபு ஆய்ந்து கொளல். விளக்கம்: நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும். |
Kural: 795 | Translation: Who make you weep and chide wrong trends And lead you right are worthy friends Explanation: You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach |
குறள் : 796 | கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். விளக்கம்: கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும். |
Kural: 796 | Translation: Is there a test like misfortune A rod to measure out kinsmen? Explanation: Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations |
குறள் : 797 | ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல். விளக்கம்: ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும். |
Kural: 797 | Translation: Keep off contacts with fools; that is The greatest gain so say the wise Explanation: It is indead a gain for one to renounce the friendship of fools |
குறள் : 798 | உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. விளக்கம்: ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும். |
Kural: 798 | Translation: Off with thoughts that depress the heart Off with friends that in woe depart Explanation: Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity |
குறள் : 799 | கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும். விளக்கம்: கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும். |
Kural: 799 | Translation: Friends who betray at ruin's brink Burn our mind ev'n at death to think Explanation: The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death |
குறள் : 800 | மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு. விளக்கம்: குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும். |
Kural: 800 | Translation: The blameless ones as friends embarace; Give something and give up the base Explanation: Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world) |
Credit: Thirukural