திருக்குறள் , Tamil Tirukural
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
குறள் பால்: [1] | அறத்துப்பால் (Virtue) |
குறள் இயல்: [2] | இல்லறவியல் (Domestic Virtue) |
அதிகாரம்: [9] | விருந்தோம்பல் (Hospitality) |
குறள் : 81 | இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. விளக்கம்: வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும் |
Kural: 81 | Translation: Men set up home, toil and earn To tend the guests and do good turn Explanation: The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality |
குறள் : 82 | விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று. விளக்கம்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று |
Kural: 82 | Translation: To keep out guests cannot be good Albeit you eat nector-like food Explanation: It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality |
குறள் : 83 | வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. விளக்கம்: தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை. |
Kural: 83 | Translation: Who tends his guests day in and out His life in want never wears out Explanation: The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty |
குறள் : 84 | அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். விளக்கம்: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள். |
Kural: 84 | Translation: The goddess of wealth will gladly rest Where smiles welcome the worthy guest Explanation: Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests |
குறள் : 85 | வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். விளக்கம்: விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ? |
Kural: 85 | Translation: Should his field be sown who first Feeds the guests and eats the rest? Explanation: Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ? |
குறள் : 86 | செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு. விளக்கம்: வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான் |
Kural: 86 | Translation: Who tends a guest and looks for next Is a welcome guest in heaven's feast Explanation: He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven |
குறள் : 87 | இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். விளக்கம்: விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும் |
Kural: 87 | Translation: Worth of the guest of quality Is worth of hospitality Explanation: The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure |
குறள் : 88 | பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். விளக்கம்: விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர் |
Kural: 88 | Translation: Who loathe guest-service one day cry: \"We toil and store; but life is dry\" Explanation: Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, "we have laboured and laid up wealth and are now without support." |
குறள் : 89 | உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. விளக்கம்: செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும். |
Kural: 89 | Translation: The man of wealth is poor indeed Whose folly fails the guest to feed Explanation: That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth It is the property of the stupid |
குறள் : 90 | மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து. விளக்கம்: அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார். |
Kural: 90 | Translation: Anicham smelt withers: like that A wry-faced look withers the guest Explanation: As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away |
Credit: Thirukural