திருக்குறள் , Tamil Tirukural
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
குறள் பால்: [1] | அறத்துப்பால் (Virtue) |
குறள் இயல்: [3] | துறவறவியல் (Ascetic Virtue) |
அதிகாரம்: [25] | அருளுடைமை (Compassion) |
குறள் : 241 | அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. விளக்கம்: பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். |
Kural: 241 | Translation: The wealth of wealth is wealth of grace Earthly wealth e'en the basest has Explanation: The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men |
குறள் : 242 | நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை. விளக்கம்: நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும். |
Kural: 242 | Translation: Seek by sound ways good compassion; All faiths mark that for-salvation Explanation: (Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.) |
குறள் : 243 | அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். விளக்கம்: அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை. |
Kural: 243 | Translation: The hearts of mercy shall not go Into dark worlds of gruesome woe Explanation: They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness |
குறள் : 244 | மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. விளக்கம்: தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை. |
Kural: 244 | Translation: His soul is free from dread of sins Whose mercy serveth all beings Explanation: (The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures) |
குறள் : 245 | அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி. விளக்கம்: அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர். |
Kural: 245 | Translation: The wide wind-fed world witness bears: Men of mercy meet not sorrows Explanation: This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kindhearted |
குறள் : 246 | பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். விளக்கம்: அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார். |
Kural: 246 | Translation: Who grace forsake and graceless act The former loss and woes forget Explanation: (The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.) |
குறள் : 247 | அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. விளக்கம்: பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம். |
Kural: 247 | Translation: This world is not for weathless ones That world is not for graceless swines Explanation: As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness |
குறள் : 248 | பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது. விளக்கம்: பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை. |
Kural: 248 | Translation: The wealthless may prosper one day; The graceless never bloom agay Explanation: Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change |
குறள் : 249 | தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். விளக்கம்: அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது. |
Kural: 249 | Translation: Like Truth twisted by confused mind Wisdom is vain in hearts unkind Explanation: If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom |
குறள் : 250 | வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து. விளக்கம்: (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும். |
Kural: 250 | Translation: Think how you feel before the strong When to the feeble you do wrong Explanation: When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself |
Credit: Thirukural