திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [6] அமைச்சியல் (Minister of State)
அதிகாரம்: [69] தூது (The Envoy)
குறள் : 681அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.


விளக்கம்:
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
Kural: 681Translation:
Love, noble birth, good courtesy Pleasing kings mark true embassy

Explanation:
The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty
குறள் : 682அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.


விளக்கம்:
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.
Kural: 682Translation:
Envoys must bear love for their prince Knowledge and learned eloquence

Explanation:
Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador
குறள் : 683நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.


விளக்கம்:
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
Kural: 683Translation:
Savant among savants, he pleads Before lanced king, triumphant words

Explanation:
To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks
குறள் : 684அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.


விளக்கம்:
இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.
Kural: 684Translation:
Who has these three: good form, sense, lore Can act as bold ambassador

Explanation:
He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three viz, (natural) sense, an attractive bearing and well-tried learning
குறள் : 685தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.


விளக்கம்:
பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.
Kural: 685Translation:
Not harsh, the envoy's winsome ways Does good by pleasant words concise

Explanation:
He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign)
குறள் : 686கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.


விளக்கம்:
கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.
Kural: 686Translation:
Learned; fearless, the envoy tends Convincing words which time demands

Explanation:
He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time
குறள் : 687கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.


விளக்கம்:
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.
Kural: 687Translation:
Knowing duty time and place The envoy employs mature phrase

Explanation:
He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due)
குறள் : 688தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.


விளக்கம்:
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.
Kural: 688Translation:
The true envoy of three virtues Is pure helpful and bold in views

Explanation:
The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three
குறள் : 689விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.


விளக்கம்:
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.
Kural: 689Translation:
The envoy who ports the king's message Has flawless words and heart's courage

Explanation:
He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter)
குறள் : 690இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.


விளக்கம்:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
Kural: 690Translation:
Braving death the bold envoy Assures his king's safety and joy

Explanation:
He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message)

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...