திருக்குறள் , Tamil Tirukural
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
குறள் பால்: [2] | பொருட்பால் (Wealth) |
குறள் இயல்: [10] | நட்பியல் (Friendship) |
அதிகாரம்: [92] | வரைவின் மகளிர் (Wanton Women) |
குறள் : 911 | அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். விளக்கம்: அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும். |
Kural: 911 | Translation: For gold, not love their tongue cajoles Men are ruined by bangled belles Explanation: The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow |
குறள் : 912 | பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல். விளக்கம்: கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும். |
Kural: 912 | Translation: Avoid ill-natured whores who feign Love only for their selfish gain Explanation: One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them) |
குறள் : 913 | பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதல் பிணந்தழீஇ அற்று. விளக்கம்: பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது. |
Kural: 913 | Translation: The false embrace of whores is like That of a damned corpse in the dark Explanation: The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room |
குறள் : 914 | பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர். விளக்கம்: பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார். |
Kural: 914 | Translation: The wise who seek the wealth of grace Look not for harlots' low embrace Explanation: The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches |
குறள் : 915 | பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். விளக்கம்: இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார். |
Kural: 915 | Translation: The lofty wise will never covet The open charms of a vile harlot Explanation: Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights |
குறள் : 916 | தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள். விளக்கம்: அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார். |
Kural: 916 | Translation: Those who guard their worthy fame Shun the wanton's vaunting charm Explanation: Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those,who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay) |
குறள் : 917 | நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள். விளக்கம்: நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர். |
Kural: 917 | Translation: Hollow hearts alone desire The arms of whores with hearts elsewere Explanation: Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things |
குறள் : 918 | ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு. விளக்கம்: வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர். |
Kural: 918 | Translation: Senseless fools are lured away By arms of sirens who lead astray Explanation: The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female |
குறள் : 919 | வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. விளக்கம்: ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும். |
Kural: 919 | Translation: The soft jewelled arms of whores are hell Into which the degraded fall Explanation: The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base |
குறள் : 920 | இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. விளக்கம்: இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும். |
Kural: 920 | Translation: Double-minded whores, wine and dice Are lures of those whom fortune flies Explanation: Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune |
Credit: Thirukural