திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [11] குடியியல் (Miscellaneous)
அதிகாரம்: [105] நல்குரவு (Poverty)
குறள் : 1041இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.


விளக்கம்:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
Kural: 1041Translation:
What gives more pain than scarcity? No pain pinches like poverty

Explanation:
There is nothing that afflicts (one) like poverty
குறள் : 1042இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.


விளக்கம்:
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
Kural: 1042Translation:
The sinner Want is enemy dire Of joys of earth and heaven there

Explanation:
When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss)
குறள் : 1043தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.


விளக்கம்:
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.
Kural: 1043Translation:
The craving itch of poverty Kills graceful words and ancestry

Explanation:
Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech
குறள் : 1044இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.


விளக்கம்:
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.
Kural: 1044Translation:
Want makes even good familymen Utter words that are low and mean

Explanation:
Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words
குறள் : 1045நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.


விளக்கம்:
வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.
Kural: 1045Translation:
The pest of wanton poverty Brings a train of misery

Explanation:
The misery of poverty brings in its train many (more) miseries
குறள் : 1046நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.


விளக்கம்:
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.
Kural: 1046Translation:
The poor men's words are thrown away Though from heart good things they say

Explanation:
The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression
குறள் : 1047அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.


விளக்கம்:
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
Kural: 1047Translation:
Even the mother looks as stranger The poor devoid of character

Explanation:
He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother
குறள் : 1048இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.


விளக்கம்:
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).
Kural: 1048Translation:
The killing Want of yesterday Will it pester me even to-day?

Explanation:
Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?
குறள் : 1049நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.


விளக்கம்:
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
Kural: 1049Translation:
One may sleep in the midst of fire In want a wink of sleep is rare

Explanation:
One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty
குறள் : 1050துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.


விளக்கம்:
நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.
Kural: 1050Translation:
Renounce their lives the poor must Or salt and gruel go to waste

Explanation:
The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...