திருக்குறள் , Tamil Tirukural
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
குறள் பால்: [2] | பொருட்பால் (Wealth) |
குறள் இயல்: [10] | நட்பியல் (Friendship) |
அதிகாரம்: [87] | பகை மாட்சி (The Might of Hatred) |
குறள் : 861 | வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. விளக்கம்: தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும். |
Kural: 861 | Translation: Turn from strife with foes too strong With the feeble for battle long Explanation: Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak |
குறள் : 862 | அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு. விளக்கம்: ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும். |
Kural: 862 | Translation: Loveless, aidless, powerless king Can he withstand an enemy strong? Explanation: How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ? |
குறள் : 863 | அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு. விளக்கம்: ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன். |
Kural: 863 | Translation: Unskilled, timid, miser, misfit He is easy for foes to hit Explanation: In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly |
குறள் : 864 | நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. விளக்கம்: ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன். |
Kural: 864 | Translation: The wrathful restive man is prey To any, anywhere any day Explanation: He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all |
குறள் : 865 | வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது. விளக்கம்: ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான். |
Kural: 865 | Translation: Crooked, cruel, tactless and base Any foe can fell him with ease Explanation: (A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities |
குறள் : 866 | காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். விளக்கம்: ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும். |
Kural: 866 | Translation: Blind in rage and mad in lust To have his hatred is but just Explanation: Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure |
குறள் : 867 | கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை. விளக்கம்: தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும். |
Kural: 867 | Translation: Pay and buy his enmity Who muddles chance with oddity Explanation: It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment) |
குறள் : 868 | குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனனிலனாம் ஏமாப் புடைத்து. விளக்கம்: ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும். |
Kural: 868 | Translation: With no virtue but full of vice He loses friends and delights foes Explanation: He will become friendless who is without (any good) qualities and whose faults are many; (such a character) is a help to (his) foes |
குறள் : 869 | செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின். விளக்கம்: அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும். |
Kural: 869 | Translation: The joy of heroes knows no bounds When timid fools are opponents Explanation: There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid |
குறள் : 870 | கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி. விளக்கம்: கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது. |
Kural: 870 | Translation: Glory's light he will not gain Who fails to fight a fool and win Explanation: The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe) |
Credit: Thirukural