திருக்குறள் , Tamil Tirukural
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
குறள் பால்: [2] | பொருட்பால் (Wealth) |
குறள் இயல்: [5] | அரசியல் (Royalty) |
அதிகாரம்: [44] | குற்றங்கடிதல் (The Correction of Faults) |
குறள் : 431 | செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. விளக்கம்: செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும். |
Kural: 431 | Translation: Plenty is their prosperity Who're free from wrath pride lust petty Explanation: Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust |
குறள் : 432 | இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு. விளக்கம்: பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும். |
Kural: 432 | Translation: Mean pride, low pleasure, avarice These add blemishes to a prince Explanation: Avarice, undignified pride, and low pleasures are faults in a king |
குறள் : 433 | தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். விளக்கம்: பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர். |
Kural: 433 | Translation: Though millet-small their faults might seem Men fearing disgrace, Palm-tall deem Explanation: Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree |
குறள் : 434 | குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை. விளக்கம்: குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும். |
Kural: 434 | Translation: Watch like treasure freedom from fault Our fatal foe is that default Explanation: Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy |
குறள் : 435 | வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். விளக்கம்: குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும். |
Kural: 435 | Translation: Who fails to guard himself from flaw Loses his life like flame-lit straw Explanation: The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire |
குறள் : 436 | தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு? விளக்கம்: முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும். |
Kural: 436 | Translation: What fault can be the king's who cures First his faults, then scans others Explanation: What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others |
குறள் : 437 | செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். விளக்கம்: செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும். |
Kural: 437 | Translation: That miser's wealth shall waste and end Who would not for a good cause spend Explanation: The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue |
குறள் : 438 | பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று. விளக்கம்: பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும். |
Kural: 438 | Translation: The gripping greed of miser's heart Is more than fault the worst apart Explanation: Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all) |
குறள் : 439 | வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. விளக்கம்: எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது. |
Kural: 439 | Translation: Never boast yourself in any mood Nor do a deed that does no good Explanation: Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things |
குறள் : 440 | காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். விளக்கம்: தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும். |
Kural: 440 | Translation: All designs of the foes shall fail If one his wishes guards in veil Explanation: If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless |
Credit: Thirukural